--- --:--:-- --

பஸ்போர்ட் என்ற அறிவிப்பு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

15

கடந்த 2018ம் ஆண்டு சேலம் மற்றும் கோவையில் பஸ்போட் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.விமானங்களுக்கு விமான நிலையம்(ஏர்போர்ட்) போல பேருந்திற்காக இந்த பஸ்போர்ட் தமிழகத்தில் முதல் மாவட்டமாக சேலத்தில் அமைக்கப்பட உள்ளதாகவும்,மத்திய அரசு அதற்கு நிதி அளிக்க உறுதியளித்துள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2018ல் கூறினார்.

 

ஆனால் பாஸ்போர்ட் என்ற அறிவிப்பு வெளி வந்ததே தவிர இன்று வரை கட்டுமானப் பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.சேலம் மாவட்டத்தில் தற்போது அதிக அளவு மேம்பாலம் வேலை நடப்பதால் எங்கு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது,பொதுமக்களுக்கு இது மிகவும் இடையூறாக உள்ளது.

 

எனவே தமிழக முதலமைச்சர் இதைக் கருத்தில் கொண்டு மிக விரைவில் மேம்பால பணிகளை முடித்து வைக்கவும், பஸ்போர்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சேலம் மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon