பராக் ஒபாமாவின் மனைவிக்கு ‘கிராமி விருது’ வழங்கி கவுரவிப்பு

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷில் ஒபாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கௌரவங்கள் ஒன்று கிராமி விருது. 2020 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

 

இதில் ஒரு பிரிவில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமாவுக்கு விருது வழங்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு மிஷில் ஒபாமாவின் பிகமின் என்ற சுயசரிதை புத்தகம் ஒலிவடிவில் வெளியிடப்பட்டது. புத்தகமாகவே இது லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்ட நிலையில் ஒலிவடிவ புத்தகமும் வரவேற்பை பெற்றது.

 

தற்போது அந்த ஒலி வடிவ புத்தகம் மிஷில் ஒபாமாவுக்கு கிராமி விருதினை பெற்றுத் தந்துள்ளது. பராக் ஒபாமா ஏற்கனவே 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இதே பிரிவில் கிராமிய விருதினை பெற்றுள்ளார். ஒபாமா குடும்பத்திற்கு கிடைக்கும் மூன்றாவது கிராமி விருது இது.


Leave a Reply