--- --:--:-- --

பள்ளி வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்த சி‌சி‌டி‌வி காட்சிகள்

7

வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்தார். குடியாத்தத்தை அடுத்த லத்தேரியை சேர்ந்த நந்தகுமாரின் மகள்நிவேதினி கேவி குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

 

சகோதரனின் ஏழாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நிவேதினி அரை நாள் விடுப்பு பெற்று வீட்டுக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது வகுப்பறையில் திடீரென வலிப்பு ஏற்பட்டு நிவேதினி மயங்கி விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட நிவேதினி வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon