குழந்தைக்கு மது கொடுத்து கொடுமைப்படுத்திய தாய் – கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு மூன்றரை வயது பெண் குழந்தைக்கு மது ஊற்றிக்கொடுத்து அடித்துக் கொடுமைப்படுத்திய கொடூர மனம் கொண்ட தாய் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் ஜீவா நகரை சேர்ந்தவர் நந்தினி. இவருக்கு மூன்றரை வயதில் நைனா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. நந்தினிக்கு மாதேஷ் என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின் கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெல்டிங் வேலை பார்த்து வரும் அசோகன் என்பவருடன் நந்தினிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. திங்கள் கிழமை மதியம் நந்தினி வீட்டில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது மது போதையில் இருந்த நந்தினி மூன்று வயது பெண் குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார்.

அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு பாகலூர் சுகாதார மையத்திலும் , அதையடுத்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்த போது குழந்தையிடமிருந்து மது வாடை அடித்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அனைத்து மகளிர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

 

பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் என்ற கல்லூரி இளைஞர் உள்ளிட்ட சில இளைஞர்களுடன் நந்தினிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் சதீஷ் உள்ளிட்ட சில இளைஞர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது குழந்தையின் நயினா ஸ்ரீ அழுததால் ஆத்திரமடைந்த நந்தினி குழந்தையின் வாயில் மதுவை ஊற்றி அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குழந்தையின் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அந்த நிலையிலும் அம்மா அம்மா என குழந்தை கதறி அழுதது அங்கிருந்தோரின் கண்களை குளமாக்கியது.


Leave a Reply