கொஞ்சம், கொஞ்சமாக நம் நாடு டிஜிட்டல் இந்தியாவாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக வணிக ரீதியிலும் பணபரிவர்த்தனைகளுக்கும் டெபிட், கிரெடிட் கார்டுகள் முதல் ஜிபே வரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் அதை சூழலில் கிரெடிட், டெபிட் கார்டுகளின் மூலம் மோசடிகளும் அதிகளவில் நடந்து கொண்டிருக்கின்றன.
எனவே டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவைகளின் பாதுகாப்பை அதிகரிக்க வங்கிகளுக்கு சில விதிகளை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.இனி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் என்ன மாதிரியான சேவைகளை பயன்படுத்த வேண்டும், பயன்படுத்த வேண்டாம், எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பது போன்ற விபரங்களை கார்டு உரிமையாளர்களே தீர்மானிக்க வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
அதாவது டெபிட் கார்டு வைத்திருக்கும் ஒருவர் எவ்வளவு பணத்தை தன் கார்டிலிருந்து பயன்படுத்த முடியும், பண பரிமாற்றங்களை உள்நாட்டில் மட்டும் செய்யலாமா அல்லது வெளிநாட்டிலும் செய்யலாமா , ஆன்லைன் பண பரிமாற்றங்களுக்கு தனது கார்டை பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்பதை எல்லாம் இனி கார்டு உரிமையாளர்களே தீர்மானிக்கலாம், ரிசர்வ் வங்கி வகுத்தளித்து இருக்கக்கூடிய புதிய விதிகள் ஏடிஎம், ஆன்லைன் பரிவர்த்தனைகள், காண்டாக்ட் லிஸ்ட் ட்ரான்ஸ்சாக்சன் பரிவர்த்தனை முறைகளை கார்டு உரிமையாளர்களே எனேபில் அல்லது டிசேபிள் செய்து கொள்ள முடியும்.
டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யும் பண பரிவர்த்தனைகளுக்கான வரம்பை கார்டு உரிமையாளர்களே மாற்றிக்கொள்ளும் வசதியும் வங்கிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகள் என இரண்டிலும் எதை பயன்படுத்த வேண்டும் என்பதையும், இனி கார்டு உரிமையாளரே தீர்மானித்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே கார்டு வைத்திருப்பவர்கள் தற்போது கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இதுவரை ஒரு முறை கூட சர்வதேச பண பரிவர்த்தனைகளையோ அல்லது காண்டாக்ட் லிஸ்ட் ட்ரான்ஸ்லஷன்களையோ செய்யவில்லை என்றால் இந்த வசதிகளை கட்டாயம் டிசேபிள் செய்ய வேண்டும். புதிதாக வழங்கப்படும் கிரெடிட் ,டெபிட் கார்டுகள் மட்டுமின்றி பழைய கார்களுக்கு மாற்றாக வழங்கப்படும் கார்டுகளுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
மொபைல் அப்ளிகேசன்ஸ், வங்கி இணைய சேவை, ஏடிஎம், வங்கி கிளைகள் மற்றும் வங்கி அலுவலகங்களிலும் இந்த சேவையை வழங்க வேண்டுமென மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் பிரீபெய்டு கார்டுகளுக்கு பொருந்தாது. டெபிட் கிரெடிட் கார்டுகளில் புதிய பரிவர்த்தனை முறைகள் எனேபில் அல்லது டிசேபிள் செய்யப்பட்டால் உடனடியாக எஸ்எம்எஸ் அல்லது இமெயில் வழியாக அலர்ட் செய்யப்பட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இந்த புதிய விதிகள் வரும் மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.






