கல்லூரி நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த ரஷ்ய கலாசார நடனங்கள்
விருதுநகரில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சியில் ரஷ்ய கலை குழுவினரின் நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஆமத்தூரில் உள்ள ஏஎல்எல் பொறியியல் கல்லூரியில் இந்திய, ரஷ்ய கலாச்சார உறவை மேம்படுத்தும் வகையில் ரஷ்யாவை சேர்ந்த கலைக்குழுவினர் 14 பேர் ரஷ்ய கலாச்சார நடனங்களை ஆடினர். ரஷ்யாவின் கதிரடிக்கும் திருவிழா, போரை நினைவுபடுத்தும் திருவிழா ஆகியவற்றை விளக்கும் நடனங்களை அவர்கள் ஆடினர்.
கால் பெருவிரலை மட்டும் தரையில் ஊன்றி ரஷ்ய கலைஞர்கள் ஆடிய நடனம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. முன்னதாக பொறியியல் கல்லூரி மாணவியர்கள் பொங்கல், ஜல்லிக்கட்டு போன்றவர்களை விளக்கும் வகையிலான நடனங்களை ஆடினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




