டிக்டாக் உலகில் கெத்து காட்டும் 60’ஸ் கிட்ஸ்கள்!
ராஜாமணி டிக்டாக்கில் காதல் கண்மணி. பாடல், வசனம் என பேரனோடு ஜோடி போட்டு இந்த 73 வயது தேவதை நிகழ்த்தும் காதல் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் காண ஹீரோயின்களாக மாறி ரொமான்ஸ் செய்வது இவரின் ரூபங்கள் என்றால், ஹீரோவாகி காட்டுவது இவரது மற்றொரு ரூபம்.
உட்கார்ந்த நிலையில் முகத்தில் ஓராயிரம் வர்ணனை காட்டும் இந்த அபிநய சரஸ்வதி செல்ல பாட்டி மெலடி, குத்து சேரில் அமர்ந்தபடியே மொத்த வீடியோவையும் முடித்து விடுகின்றனர். இந்த டேக் இட் ஈசி டிக் டாக் ஜோடி செல்வராகவன் வரை பிரபலம் பேரன்கள் அருகில் நிற்கையில் பாட்டிகள் வயதை மறக்கிறார்கள். சுற்றம் மறந்து குழந்தையாய் துள்ளி குதிக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமல்ல பேரன்களின் ஆசைக்காக வெட்கத்தோடு தயங்கி தயங்கி வீடியோ செய்யும் எண்ணற்ற எலிசபெத் ராணிகள் டிக்டாக்கில் உண்டு. இணையம் உறவுகளை நீர்த்துப்போக செய்கிறது என்ற கவலை எல்லோரிடமும் படர்ந்துள்ளது.

ஆனால் அன்பு அவ்வளவு எளிதாக விழுந்து விடக் கூடியது அல்ல, மனித இனத்தின் முதல் தேவை அன்பு தான். மற்றவையெல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சமே எனவே டிக் டாக் மட்டுமல்ல. இன்னும் எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அன்பு அத்தனையையும் ஊடுருவித் துளைக்கும். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




