5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு- நல்லாசிரியர் விருதை ஒப்படைக்க வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தான் வாங்கிய நல்லாசிரியர் விருதை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சோலியநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர் அள்ளிமுத்து. இவருக்கு தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிறந்த நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை இருமுறை வழங்கியுள்ளது.

இவர் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு அளிக்கப்பட்ட நல்லாசிரியர் விருதை தர்மபுரி ஆட்சியரிடம் ஒப்படைத்தார். 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்துவதால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்படும் என்று இந்த முடிவை எடுப்பதாக அவர் கூறினார்.

 

இதனை ஏற்க மாவட்ட ஆட்சியர் மறுத்துவிட்டார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அல்லிமுத்துவின் கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு ஆட்சியர் அரசுக்கு தெரியப்படுத்தி அடுத்தவாரம் பதில் பெற்றுத் தருவதாக கூறினார்.


Leave a Reply