ஹைதராபாத்தில் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிய சிறுத்தை

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிய சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். ஹைதராபாத் வடபகுதியிலிருந்து சிறுத்தை ஒன்று ஷாத்நகர் குடியிருப்புக்குள் வந்தது. இதையடுத்து அங்கு உள்ள வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அந்த சிறுத்தை அங்கேயே படுத்து உறங்கியது.

 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.


Leave a Reply