தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்பட்ட 1,758 கேரட் வைரம்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரத்தை புகழ்பெற்ற லூயிஸ் விட்டல் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவிலுள்ள கரோ சுரங்கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆயிரத்து 758 கேரட் வைரம் வெட்டி எடுக்கப்பட்டது.
டென்னிஸ் பந்து வடிவ இந்த வைரத்தின் விலை இந்திய மதிப்பில் விலையில் 355 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆடம்பர கைபைகளுக்கு பெயர்போன பிரஞ்ச் பேஷன் நிறுவனமான லூயிஸ் விட்டல் இந்த வைரத்தை வாங்க உள்ளதாக அதன் தலைமை நிர்வாகி மைக்கேல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை தங்களின் போட்டி நிறுவனத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




