சிறைக்கு அனுப்பப்பட்ட நாம் தமிழர் கார்த்திகா!
தாராபுரம் இடைத்தேர்தலின்போது முதல்ர் விஜய் ரோடுஷோ சென்றபோது அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் கார்த்திகா. பிரச்சாரத்தின்போது பரபரப்பாக இயங்கிய இவர், அனுமதி இன்றி பேனர் வைத்தது, முதல்வரின் ரோடு ஷோ நடந்தபோது போராட்டம் நடத்தியது என சர்ச்சைகளிலும் சிக்கினார். அக்டோபர் 6-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்து அக்டோபர் 9-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது. த.வெ.க வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கு பிறகு, முதல்வரின் ரோடு ஷோவில் போராட்டம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கார்த்திகா உள்ளிட்ட 9 பேரை நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்தனர். இவரது கைது செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இரவு உடையுடன் என்னை கைது செய்துவிட்டார் என்று கார்த்திகாவும் ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை கைது செய்யப்பட்ட கார்த்திகா உள்ளிட்ட 9 பேரை நள்ளிரவில், தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரியின் வீட்டில் காவல்துறையினர் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 9 பேரும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





