சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை கொண்டாடுவதற்காக பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய நாட்களில் ஞாயிறு கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீல மற்றும் பச்சை வழித்தடங்களில், மெட்ரோ சேவைகள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரையிலான பிற்பகல் மற்றும் மாலை பீக் நேரங்களில் ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் 11 மணி வரை, இந்த எண்ணிக்கை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் என குறைக்கப்படும். புதிதாக திறக்கப்பட்ட மஞ்சள் வழித்தடத்தில் 2 நாட்களும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். திருத்தப்பட்ட விடுமுறை கால அட்டவணைக்கு ஏற்ப தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





