--- --:--:-- --

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.!

2

அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்தது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13,490க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,920க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

 

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,390க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.10,970க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.87,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.230க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon