--- --:--:-- --

வனப்பகுதியில் நடைபயிற்சி சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு

5

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் நடைபயணம் மேற்கொண்டு இருந்த பெண், யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தோலம்பாளையம் கிழக்கு பகுதியில் இருக்கும் வடபகுதி குறிப்பிட்ட சாலையில் துடியலூரை சேர்ந்த புவனேஸ்வரி, அவரது கணவர் பிரசாந்த் உள்ளிட்ட சிலர் அனுமதியின்றி நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

 

அப்போது திடீரென ஆண் யானை ஒன்று எதிரே வந்துள்ளது. இதனை பார்த்து மற்ற நபர்கள் தப்பி ஓடி விட புவனேஸ்வரியும், அவரது கணவரும் யானையிடம் சிக்கிக்கொண்டனர். அப்போது யானை மிதித்து புவனேஸ்வரி அவரது கணவர் பிரசாந்த் கண்முன்னே உயிரிழந்துள்ளார்.

 

இந்த சம்பவம் குறித்து துடியலூர் காவல்துறை நடத்திய விசாரணையில் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் வனப் பகுதியில் அனுமதியின்றி நடை பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon