காவலன் செயலி வைத்திருக்கும் பெண்களுக்கு 10% தள்ளுபடி…!

மதுரையில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு உணவகத்தில் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கும் இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழகத்தில் பெண்கள் மீதான குற்றங்களை குறைக்கும் விதமாக தமிழக காவல்துறையால் காவலன் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

 

மதுரை பொன்மேணி பகுதியை சேர்ந்த ராஜபிரபு என்ற இளைஞர் தன்னுடைய உணவகத்திற்கு வரும் பெண்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு உணவில் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறார்.

 

இவர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பெண்கள், காவல் துறையினர் என பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Leave a Reply