ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,21,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஆட்சியர் துவக்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 398 குழந்தைகளுக்கு
போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது: இளம்பிள்ளைவாதம் என்ற நோயை தடுக்கும் தடுப்பு மருந்தே போலியோ சொட்டு மருந்து.

 

சொட்டு வழங்கும் முகாம் இன்று (19. 1.2020) இந்தியாவில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,229 மையங்களில் 4,912 பணியாளர்களை கொண்டு 1,21,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெறுகிறது. 27 சிறப்பு குழுக்கள் மற்றும் 33 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள் கோயில் திருவிழாக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்யாண நிகழ்ச்சிகள், இலங்கை அகதிகள் முகாம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த முகாம்களில் தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பயனடைய வேண்டும் என்றார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் அல்லி, நலப்பணிகள் இணை இயக்குநர் வெங்கடாசலம், துணை இயக்குநர் குமரகுருபரன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால், நிலைய மருத்துவர் ஞானக்குமார், டாக்டர் மலையரசு, தாசில்தார் முருகவேல், நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன், ரோட்டரி சங்க செயலாளர் செந்தில்குமார், அரசு மருத்துவமனை மருந்தாளுனர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply