ராசிபுரம் அருகே தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு வழங்கிய அன்பளிப்புகளை திரும்பி வழங்குமாறு நோட்டீஸ் அனுப்பிய கொடுமை அரங்கேறியுள்ளது .
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சியின் வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ரமேஷ் என்பவர் 72 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த ரமேஷ் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுத்த அன்பளிப்புகளை திருப்பி வழங்குமாறு நோட்டீஸ் அடித்து விநியோகித்து வருகிறார்.
வாக்களிப்பதாக உறுதி கூறி அன்பளிப்பை ஏற்றுக் கொண்டவர்கள் அதை திருப்பிக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். வேட்பாளரிடம் உறுதியளித்து துரோகம் செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார். இனி வரும் தேர்தல்களில் அன்பளிப்பு வாங்காமல் வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.