பிரதமர் மோடி நாடகமாடுவதாக திருமாவளவன் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தயார் செய்துவிட்டு மக்களிடம் கருத்து கேட்பது போல் பிரதமர் நரேந்திர மோடி நாடகம் ஆடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

 

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக அரசு தான் இயற்றிய சட்டத்திற்கு தானே ஆதரவு பேரணி நடத்துவது புதுமையாக இருப்பதாக தெரிவித்தார். அதிமுக பாமக இணைந்து ஆதரவு தந்தால் தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

இலக்கியவாதி நெல்லை கண்ணன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply