மத்திய பட்ஜெட் 2020: மக்களிடம் ஐடியா கேட்கும் பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் இந்த பட்ஜெட் நிறைவேற்றும் என குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று பதிவிட்டுள்ள மோடி மக்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் mygov.in என்ற அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply