பொங்கல் சிறப்புத் தொகுப்பை வரிசையில் நின்று வாங்க முடியாமல் திணறும் முதியோர்கள்

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசைப் பெற்றனர்.

 

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 9ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பணிகள் காலை 9 மணிக்கு தொடங்கியது.

 

மாலை 6 மணி வரை பொங்கல் பரிசு தொகை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டாலும் மக்கள் அதிகாலை முதலே ரேஷன் கடைகளின் முன்பு கூடி நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசு வாங்கிச் சென்றனர். சில இடங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது .

 

திண்டுக்கலில் பத்தொன்பது மற்றும் இருபதாம் வார்டுகளில் ரேஷன் கடைகளில் சிறப்பு தொகுப்பை அதிமுகவினர் வழங்குவதாக கூறி அமமுகவினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பான சூழல் காணப்பட்டது. உதகை போன்ற மலைப் பகுதிகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே மக்கள் ரேஷன் கடைகளின் முன் கூடினர்.

 

ஸ்மார்ட் கார்டு மூலமாகவே பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு இல்லை என்றால் குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஒருவரின் ஆதார் அட்டையை காண்பித்து அல்லது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் கடவு எண்ணை அடிப்படையாக வைத்து பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம்.


Leave a Reply