மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமநாதபுரத்தில் பல்வேறு அமைப்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகம் முன் தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட பொது செயலர் என்.கே.ராஜன் தலைமை வகித்தார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும், பொதுத்துறைகளை தனியார்மயக்குவதை கைவிட வேண்டும். அழிவின் விளிம்பில் உள்ள சிறு, குறு தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மாவட்ட குழு உறுப்பினர்கள் பா.சண்முகராஜன், கே.களஞ்சியம், ஆர்.பார்த்திபன், சிஐடியுசி மாவட்ட தலைவர்
எம்.அய்யாதுரை மாவட்ட துணை தலைவர் ஆர்.குருவேல், தொமுச நிர்வாகி வில்சன் அமல்தாஸ்,
புறநகர் செயலாளர் ஆர்.செல்வக்குமார், சோஷியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் மாவட்ட தலைவர் முஸ்தாக் அகமது, மாவட்ட அமைப்பாளர் லியாகத் அலிகான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply