போலீஸ் வாகனத்தில் அமர்ந்து டிக்டாக் – 3 இளைஞர்களுக்கு நூதன தண்டனை..!

தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்தின் மீது அமர்ந்து டிக் டாக் வீடியோ எடுத்த 3 இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரேயர் நகரில் ஒர்க் சாப்பில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது அமர்ந்து அவர்கள் டிக் டாக் வீடியோவை பதிவு செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக மூன்று இளைஞர்களை பிடித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, தாங்கள் செய்த தவறுக்காக அவர்கள் மன்னிப்பு கோரினார்.

 

அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி காய்கறி சந்தை முன்பு நாள் முழுவதும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு காவல்துறையினர் கூறினர். அதனை ஏற்று மூன்று இளைஞர்களும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply