ஈரானில் வெடித்துச் சிதறிய உக்ரைன் நாட்டு விமானம்..! 180 பயணிகள் பலி..? அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதா..?

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே 180 பயணிகளுடன் சென்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறியது. விமானம் விபத்துக்குள்ளானதா? அல்லது அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த சில நாட்களாக போர்ப் பதற்றம் சூழ்ந்துள்ளது.அமெரிக்க ராணுவத்தின் டிரோன் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

 

இதனால், அமெரிக்காவை பயங்கரவாத நாடு என அறிவித்த ஈரான் போருக்கும் தயார் என பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே எந்த நேரமும் போர் மூளலாம் என்றும், அது 3-வது உலகப் போராக மாறலாம் என்ற அச்சமும் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே, 180 பயணிகளுடன் சென்ற உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் வெடித்துச் சிதறிய சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. உக்ரைன் நாட்டின் போயிங் 737 ரக விமானம் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டது.

 

விமானத்தில் ஊழியர்கள் உட்பட180 பேர் இருந்தனர். உக்ரைன் தலைநகர் கிங் நகருக்கு செல்லவிருந்த இந்த விமானம் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

ஈரான் – அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் நிலவும் சூழலில், விமானம் கோளாறு காரணமாக வெடித்து சிதறியதா? அல்லது அமெரிக்காவின் நாச வேலையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்து பரபரப்பு அதிகரித்துள்ளது. நடுவானில் விமானத்தில் தீப்பொறி கிளம்பி அடுத்த சில நிமிடங்களில் வெடித்துச் சிதறும் காட்சிகளுடன் வீடியோ ஒன்றை அல்ஜசீரா டிவி டிவிட்டரில் பதிவிட்டுள்ளதும் வைரலாகியுள்ளது.


Leave a Reply