08.01.2020 புதன்கிழமை இன்றைய ராசி பலன்கள்

மார்கழி 23

08.01.2020 – புதன்கிழமை

சந்திராஷ்ட்டமம் -அனுஷம்,கேட்டை

இன்று- பிரதோஷம்

⚜ராசி பலன்கள்⚜

 

🔯மேஷம் ராசி

 

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். வாக்குவன்மையால் இலாபம் அடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். அந்நியர்களால் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

அஸ்வினி : மேன்மை உண்டாகும்.
பரணி : கலகலப்பான நாள்.
கிருத்திகை : தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

 

🔯ரிஷபம் ராசி

 

பயணங்களை மேற்கொள்வீர்கள். திருப்திகரமான தனவரவுகள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பலவிதமான சிந்தனைகளால் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழல் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

கிருத்திகை : திருப்திகரமான நாள்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : அமைதி வேண்டும்.

 

🔯மிதுனம் ராசி

 

வான்வழி பயணத் தொழில் முறையில் உள்ளவர்களுக்கு புகழ் உண்டாகும். தடைபட்ட வேலைகளை பொறுமையுடன் செயல்படுத்தவும். மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கும். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

மிருகசீரிஷம் : புகழ் உண்டாகும்.
திருவாதிரை : கவலைகள் நீங்கும்.
புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.

 

🔯கடகம் ராசி

 

பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் உதவியால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.

 

🔯சிம்மம் ராசி

 

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனம் செலுத்தவும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

மகம் : வேலைவாய்ப்புகள் சாதகமாகும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.

 

🔯கன்னி ராசி

 

மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அரசாங்கத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.

🔯துலாம் ராசி

 

புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருட்கள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். கூட்டாளிகளிடம் பொறுமையாக இருக்கவும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

 

சித்திரை : வாதத்தை தவிர்க்கவும்.
சுவாதி : நிதானம் வேண்டும்.
விசாகம் : பொறுமை வேண்டும்.

 

🔯விருச்சகம் ராசி

 

பங்குதாரர்களால் சுபவிரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபச்செய்திகள் வந்தடையும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

விசாகம் : அபிவிருத்தி செய்வீர்கள்.
அனுஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
கேட்டை : முயற்சிகள் மேம்படும்.

 

🔯தனுசு ராசி

 

தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதி காக்கவும். வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். சிறு ஞாபகமறதிகள் உண்டாகும். பெரியோர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

 

மூலம் : அமைதி காக்கவும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

 

🔯மகரம் ராசி

 

பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சுயதொழில் புரிவோர் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். நண்பர்களுடன் கூடிப்பேசி மனம் மகிழ்வீர்கள். பொருட்களை சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : முயற்சிகள் மேலோங்கும்.
அவிட்டம் : கலையறிவு அதிகரிக்கும்.

 

🔯கும்பம் ராசி

 

தாயாரின் ஆரோக்கியம் சம்பந்தமான செயல்களில் கவனம் வேண்டும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படவும். பழைய தொழிலாளர்களை மாற்றுவீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

 

🔯மீனம் ராசி

 

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் சுபவிரயம் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறுதூர பயணங்களால் இலாபம் கிடைக்கும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரட்டாதி : சுபவிரயம் உண்டாகும்.
ரேவதி: இலாபம் கிடைக்கும்.


Leave a Reply