ஒன்றியக் கவுன்சிலர் பதவியை சட்டவிரோதமாக ஏலம் எடுத்ததாக புகார்

லால்குடியில் உள்ளாட்சித் தேர்தலில் தமது கணவர் தோல்வியடைந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஏலத்தொகை கொடுத்த ரூபாயை பெண் எம்எல்ஏ திரும்ப கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 

மண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் பழையூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். அவர் அந்தப் பதவியை 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்தார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் மற்றும் அவரது மனைவி எம்எல்ஏ பரமேஸ்வரி தாங்கள் ஏலத்திற்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்பதாக அவரது ஆதரவாளர்கள் பேசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவியை சட்டவிரோதமாக ஏலம் எடுத்ததாக ஏற்கனவே போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது இந்த வீடியோ குற்றத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.


Leave a Reply