வரும் 9-ந் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ள தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் திரையிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் தர்பார் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு இப்படம் வரும் 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், இதற்கு முன் 2.0 படத்தை தயாரித்த போது வாங்கிய கடனை வட்டியுடன் ரூ 24.70 கோடியை திருப்பிச் செலுத்தாததால், தர்பார் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என மலேசியாவைச் சேர்ந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில், இன்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தர்பார் படத்தை மலேசியாவில் வரும் 9-ந் தேதி திரையிடக்கூடாது. கொடுக்க வேண்டிய கடன் தொகையில் ரூ4.90 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்த பின்னரே மலேசியாவில் திரையிட அனுமதிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.