--- --:--:-- --

தமிழக லாரியில் கர்நாடக கொடியை கட்டி அட்டகாசம் செய்த கும்பல்

2

கர்நாடகாவில் தமிழக பதிவு எண் கொண்ட லாரியை வழிமறித்து அந்த மாநில கொடியை கட்டிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

 

கடந்த மாதம் பெங்களூருவில் இருந்து தமிழகம் வழியாக சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு சென்ற கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனத்தில் அந்த மாநில கொடிகட்டி வந்ததாகவும், அந்த கொடியை தமிழக காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றிய தாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே சென்று கொண்டிருந்த தமிழக பதிவு எண் கொண்ட லாரியை மறித்து 3 பேர் கொண்ட கும்பல் அந்த லாரியில் கர்நாடக மாநில கொடியை கட்டியுள்ளனர். பின்னர் ஓட்டுநரை ஜே கன்னடா என்று கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஓட்டுநர் தனக்கு கன்னட மொழி தெரியாது என்று கூறியும் தொடர்ந்து அந்த நபர்கள் ஓட்டுநரை வற்புறுத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon