மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கடலூர் மாவட்டம் விளாங்காட்டூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் விளாங்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் வெற்றி பெற்றதற்காக அறிவிப்பதில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி மறு வாக்கு எண்ணிக்கை நடத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழாவை தடுக்கும் வகையில் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பதவியேற்று விழா நடைபெற்றது.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!
மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்..!
இது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகமில்லையா? - பார்த்திபனுக்கு வன்னி அரசு கேள்வி