ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஆயுள் கைதி தண்டனை ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா, புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்ததாக பொங்கல் விழா வர உள்ளது. எனவே ரவிச்சந்திரனுக்கு போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்க இயலாது என்று கூறினார்.

 

ரவிச்சந்திரன் இதற்கு முன்பு சாதாரண விடுப்பில் சென்ற போது எந்தவித அசம்பாவிதங்களும் நிகழவில்லை என்று மேற்கோள் காட்டிய நீதிபதிகள் அவருக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர்.


Leave a Reply