100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள் இயக்குவதற்கான விவர அறிக்கையை மத்திய அரசின் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயுக்கும், ரயில்வேத்துறையும் முன்வைத்துள்ளன.
22,500 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில் சென்னை ஹவுரா, சென்னை கோக்லா, டெல்லி மும்பை, டெல்லி பாட்னா உள்ளிட்ட 100 மார்க்கங்களில் 150 தனியார் ரயில்களை இயக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி சந்தை சார்ந்த கட்டணத்தை பயணிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ள அனுமதி அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு சேர்ந்ததாகவோ அல்லது வெளிநாட்டு சேர்ந்ததாகவோ இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. டெல்லி லக்னோ வழித்தடத்தில் ஏற்கனவே ஒரு தனியார் ரயில் இயக்கப்பட்டு உள்ளது.
அதை எடுத்து மும்பை அகமதாபாத் இடையே சில வாரங்களில் இரண்டாவது தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் மேலும் 150 ரயில்களை தனியாரிடம் தரும் யோசனை உருவாகியுள்ளது.