மின்மயான பணியாளரின் மனைவி பஞ்சாயத்து தலைவரான வெற்றிக்கதை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின் மயானத்தில் சடலங்களை எரியூட்டுபவரின் மனைவி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட ராம் நகரை சேர்ந்த ரமேஷ் கடந்த 5 ஆண்டுகளாக தாராபுரம் நகராட்சி மின் மயானத்தில் சடலங்களை எரியூட்டுபவராகவும், பணி மேலாளராகவும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வியும் இதே மின்மயானத்தில் சடலங்களை எரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

 

குழந்தைகளை கவனிக்க வேண்டிய நிலையில் வேலையை விட்டு வீட்டில் இருந்து வந்த செல்வி, தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த ஊராட்சியில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 7 பேர் போட்டியிட்ட நிலையில் செல்வி சுயேட்சையாக களம் இறங்கினார்.

 

முகவர் ஒருவரை கூட நியமிக்காத நிலையில் 982 வாக்குகளை பெற்று ஊராட்சி மன்ற தலைவராக செல்வி தேர்வாகியுள்ளார். பணபலம் உள்ள வேட்பாளர்களை தவிர்த்து மயானத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு இந்த ஊராட்சி மக்கள் வாய்ப்பு வைத்திருக்கிறார்கள்.


Leave a Reply