குரல்வழி வங்கி சேவையை வழங்கும் சிட்டி யூனியன் வங்கி

இந்தியாவிலேயே முதன் முறையாக குரல்வழி வங்கி சேவையை சிட்டி யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது. 1904 இல் தொடங்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி 650 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

 

அண்மையில் 116 வது நிறுவன தின விழாவில் சி யு பி ஆல் இன் ஒன் என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் புதிய அம்சமாக குரல் வழியில் வங்கி சேவையை வழங்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது .இதுபோன்ற சேவையை இந்தியாவிலேயே வழங்கும் முதல் வங்கி என்ற பெருமையை சிட்டி யூனியன் வங்கி பெறுகிறது.

 

செல்போன் செயலியில் உள்ளே சென்றால் வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் குரல்வழி சேவையைப் பெறுவதற்கான ஐகான் இருக்கும். அதில் கிளிக் செய்து உள்ளே சென்றால் குரல்வளையில் நமக்கான தகவலை பெற முடியும்.

 

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது. பணம் அனுப்புதல், வங்கி கணக்கில் இருக்கும் தொகை, கடைசியாக மேற்கொண்ட பண பரிமாற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறித்த தகவலை குரலில் பேசி உடனுக்குடன் பெற முடியும்.


Leave a Reply