மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு பயத்தை போக்குவது குறித்து ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.

 

மூன்றாவது ஆண்டாக இந்நிகழ்ச்சி வரும் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதால் பிரதமரின் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளிலும் ஒளி பரப்படுவதாகவும் இதனை காலை 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர ஏற்பாடு செய்யுமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது.

 

இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என விளக்கமளிக்கப்பட்டது. பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை 20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரதமரை மகிழ்விக்க பொங்கல் தேதியை மாற்றி விடாதீர்கள் என தமிழக அரசை விமர்சித்துள்ளார்.


Leave a Reply