சுயேச்சை வேட்பாளர் செல்வராணியை அடித்து உதைத்து வெளியேற்றி கைது செய்த போலீசார்

திருச்சி மாவட்டம் லால்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்று வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முயன்ற ஊராட்சி ஒன்றிய சுயேச்சை வேட்பாளர் செல்வராணியை போலீசார் கைது செய்தனர். இன்று வாக்கு எண்ணிக்கையானது பரவலாக தமிழகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .

 

இந்த நிலையில் 30ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவானது திருச்சி மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் நடைபெற்றது. லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுயேச்சை வேட்பாளர் செல்வராணி என்பவர் தேர்தலில் போட்டியிட்டார். நான்கு பேர் போட்டி இருந்த இடத்தில் மூன்று பேரின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் மட்டுமே இருந்தது.

 

இந்த நிலையில் அப்போதே செல்வராணி மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமும் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் உடனடியாக இந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் மறு தேர்தல் வைக்க வேண்டுமென அவர் கோரிக்கை வைத்திருந்தார். நேற்றும், நேற்று முன்தினமும் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து புகார் அளித்திருந்தார்.

 

இருப்பினும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் அதனை தடுக்கும் விதமாக வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என அவர் கூறினார். இதனால் சுயேச்சை வேட்பாளர் செல்வராணி அடித்து உதைத்து வெளியேற்றப்பட்டார்.


Leave a Reply