மாஸ்டர் பஸ்ட் லுக் சொல்வது என்ன?

நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்புகள் இரண்டு கட்டமாக நடைபெற்று வந்தன. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் காளிதாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

கத்தி படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜயின் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், கர்நாடக மாநிலம் ஹிமோகாவில் நடைபெற்று வந்தன.

 

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி தயாரிப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து தளபதி 64 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை முதலே விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் டே தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் ட்ரெண்ட் செய்து தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர்.

 

அதன்படி தளபதி64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் ஏற்கனவே விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்ற தகவலை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

 

போஸ்டரில் விஜய் மேஜை மீது அமர்ந்து கொண்டு கை காப்பு ஒன்றை சுழற்றி விடுவது போலவும், ஒரு கையினை தன்னுடைய தலை முடியை கோதி இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.

 

லோகேஷ் கனகராஜ் படமென்பதால் மாநகரம் கைதி படங்களைப் போன்று மாஸ்டரும் ஒரு இன்டர்ன்ஷன் படமாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. இந்த போஸ்டரில் இருக்கும் விஜய் ஒரு விசாரணைக் கைதியாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


Leave a Reply