ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு – விசாரணையை துரிதப்படுத்த தந்தை வலியுறுத்தல்

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து விசாரணையை சிபிஐ துரிதப்படுத்த வேண்டுமென அவரது தந்தை லத்தீப் வலியுறுத்தியுள்ளார். விசாரணை அதிகாரியை சந்திப்பதற்காக சென்னை வேளச்சேரியில் உள்ள சி‌பி‌ஐ அலுவலகத்திற்கு அவர் சென்றார்.

 

ஆனால் சிபிஐ அதிகாரி இல்லாததால் வரும் திங்கள்கிழமை வரும்படி கூறிவிட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சிபிஐ விசாரணையில் தனது மகளின் இறப்புக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

 

பிரதமர், முதல்வர் என அனைவரிடமும் முறையிட்டும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திய லத்தீப் கோட்டூர்புரம் காவல்துறையினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தெரிவித்தார்.


Leave a Reply