தனியார் விளையாட்டு பூங்காவில் உள்ள ராட்சத ராட்டினத்தில் சிறுமியின் தலை சிக்கிக் கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபத்தான நேரத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடாமல் தப்பிச் சென்ற ஆப்பரேட்டரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் செயல்பட்டு வரும் தனியார் விளையாட்டு பூங்காவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு சென்ற கேரளாவை சேர்ந்த சல்மா என்று சிறுமி ராட்சத ராட்டினத்தில் ஏறியுள்ளார். ராட்டினம் சுற்று தொடங்கிய போது எதிர்பாராதவிதமாக சிறுமியின் தலை பக்கவாட்டு கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது.
அருகிலிருந்தவர்கள் கூச்சலிட்டதால் பதற்றமடைந்த ராட்டினத்தின் ஆபரேட்டர் அங்கிருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.