--- --:--:-- --

மலக்குடலில் வைத்து தங்கம் கடத்தல்!

2

மலக்குடலில் வைத்து சுமார் 900 கிராம் தங்கம் கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த இருவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையின்போது தங்கம் கடத்தி வந்த இருவர் பிடிபட்டனர்.

 

அவர்கள் இருவரும் தங்கம் வைக்கப்பட்டிருந்த 7 பண்டல்களை விழுங்கி மலக்குடலில் சேமித்து வைத்திருந்தது தெரியவந்தது. 920 கிராம் தங்கத்தை அவர்களிடமிருந்து சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் துபாயில் இருந்து வந்த பெண்ணிடம் இருந்து 238 கிராம் எடை கொண்ட தங்க செயினை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon