அனுபவமில்லாத எங்களை வைத்தே தோனி ஆடினார் – இஷாந்த் பெருமிதம்

கடந்த 2007ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 19 வயது இளைஞனாக அறிமுகமானார் இஷாந்த் சர்மா. தற்போது 31 வயதிலும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசிக் கொண்டிருக்கும் இவர், தனது அனுபவத்தில் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அணில் கும்ப்ளே, தோனி, விராட் கோலி ஆகியோரது தலைமையின்கீழ் பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 

இந்நிலையில் தனது அனுபவத்தின் அடிப்படையில் தோனி தலைமையிலான அணி குறித்தும், தோனியின் காலகட்டத்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஏன் பெரிதாக ஜொலிக்கவில்லை என்பது குறித்தும், விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

 

அந்த விளக்கத்தில் அவர் என்ன கூறியுள்ளார் என்றால், தோனி காலத்தில் அணியில் இருந்த சிலருக்கு பெரிதளவில் அனுபவம் கிடையாது என்றும் அதேபோல வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்சிமுறையில் பயன்படுத்தப்பட்டதால் குழுவாக எங்களால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது என்றும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் முன்னதாக அணியில் அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால் தங்களுக்குள் பெரிதாக தொடர்பு இருந்ததில்லை எனவும், தாங்கள் சிறப்பாக ஆட முடியாததற்கு அதுவும் ஒரு காரணம் என்றும் கூறியுள்ளார். அதேசமயம் விராட் கோலி பொறுப்பேற்றபோது தங்கள் புதிய அனுபவத்தை பெற்றிருந்ததாகவும், அது தங்களுக்கு பேருதவியாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

அதுமட்டுமல்லாமல் ஒரு பந்து வீச்சாளராக அதிகம் விளையாடி குடும்பத்தை விட அணியின் உடன் அதிக நேரத்தை செலவிட்டு அவர்களின் வெளிப்படையான ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு களத்தில் இறங்கும்போது விளையாட்டை அனுபவித்து விளையாடுகிறோம் எனவும், இது வேறு மாதிரியான உணர்வாக இருக்கிறது என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனால்தான் இப்போதைய அணி வேகப்பந்து வீச்சில் பெரிதாக ஜொலித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply