குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரும் வன்முறை..! டெல்லியில் 144 தடையுத்தரவு!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்வதால் டெல்லியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

முத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்களும் தீவிரமாகியுள்ளன. தலைநகர் டெல்லியிலும் 3 தினங்களுக்கு முன், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. பல வாகனங்கள் தீக்கிரையாகின.மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதும் பெரும் சர்ச்சையானது. இதைக் கண்டித்து நாடு முழுவதும் பல நகரங்களில் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நேற்று வட கிழக்கு டெல்லியில் நடந்த பேரணியிலும் . பெரும் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேரணியில் சென்றவர்கள் கற்களை வீசி சரமாரி தாக்குதல் நடத்தியதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

 

இதனால் டெல்லியில் போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கும் வகையில், நேற்று மோதல் ஏற்பட்ட சீலாம்பூர், ஜாபராபாத் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply