--- --:--:-- --

11ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டி‌வி மெக்கானிக்!

14

சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்து மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முதியவர் ஒருவரின் அத்துமீறலால் பள்ளி சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விவகாரத்தை சிறுமியின் தாயாரும், சகோதரியும் மறைக்க முயன்று போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

 

பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி வீட்டில் இருந்தபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அந்த சிறுமிக்கு வீட்டிலேயே இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயும், சகோதரியும் இறந்து பிறந்த சிசுவை யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்னாலே புதைத்துள்ளனர்.

 

ஆனால் இது குறித்த ரகசிய தகவல் தனிப் பிரிவு போலீசாருக்கு கிடைத்துள்ளது. சிறுமியின் வீட்டுக்கு சென்ற போலீசார் சிறுமி அவரது தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, வள்ளி தம்பதிக்கு ஐந்து பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

சர்பத்தில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய டிவி மெக்கானிக்

முத்துசாமி உடல்நலக்குறைவால் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் வள்ளி கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த தம்பதியின் கடைசி மகள் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். திருமணமாகி கணவருடன் அதே கிராமத்தில் வசித்து வரும் அந்த சிறுமியின் சகோதரி வீட்டிற்கு அருகில் 50 வயதான டிவி மெக்கானிக் ராஜு என்பவர் வசித்துவருகிறார்.

 

சிறுமி அவ்வப்போது ராஜு வீட்டிற்கு சென்று டிவி பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்
வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கு ராஜூ சர்பத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளார். இதை அறியாமல் அதை வாங்கி குடித்த சிறுமி மயங்கி உள்ளார். அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

 

இதனால் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். ஆனால் இதனை அறியாத சிறுமி வழக்கம்போல பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில்தான் வீட்டிலிருந்து சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு ஆறு மாதத்தில் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இந்த விவகாரத்தை மறைப்பதற்காக குழந்தையை யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளனர்.

 

இதையடுத்து டிவி மெக்கானிக் ராஜுவை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறுமியின்தாய் மற்றும் சகோதரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தும் செய்தி.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon