குடியுரிமை திருத்த சட்டம்: மம்தாவின் பேச்சுக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கத்தில் அமல்படுத்த போவதில்லை என்று பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. அப்போது பேசிய அவர் மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் குடியுரிமை சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டமோ மேற்கு வங்கத்தில் செயல்படுத்தபடாது என்றார்.

 

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என அரசு தரப்பில் ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்டதற்கு எதிராகவும், பேரணியில் மம்தா பேசியதாகவும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply