ஸிட்ரெண்ட் ஹாக் என்ற வைரஸ் ஆண்ட்ராய்டு செல்போன்களை தாக்க வாய்ப்பிருப்பதாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்களை தாக்க ஹேக்கர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் ஸிட்ரெண்ட் ஹாக் இது மால்வேராள் தாக்கப்பட்ட போலி செயலிகளுக்கு பாதுகாப்பான செயலிகள் போன்ற தோற்றத்தைக் கொடுத்து பயனர்களை நம்பவைக்கும். பயன்படுத்துவோர் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கிய பின் ஸ்மார்ட்போனில் ஊடுருவி அனைத்து தகவல்களையும் திருடுகிறது.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இந்த வைரஸ் தாக்கியிருப்பது பயனர்களுக்கு தெரியாது என்றும் கூறப்படுகிறது. அண்மையில் வெளிவந்த ஆண்ட்ராய்டின் 10 வர்ஷன்களிலும் இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் ஊடுருவி உரையாடல்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், அழைப்பு உள்ளிட்ட தகவல்களை திருடும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரபலமான 500 செயலிகளில் இந்த ஸிட்ரெண்ட் ஹாக் என்ற வைரஸ் தாக்கியுள்ளதாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மொபைல் செயலிகளில் வரும் பாப் அப்களுக்கு அனுமதி கொடுக்கும் போது இந்த வைரஸ் ஸ்மார்ட்போன்களில் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. எனவே pop-up அறிவிப்புகள் அனைத்திற்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்றும் அதில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹேக்கர்களின் செயல்முறை பட்டியலை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள உள்துறை அமைச்சகம் இத்தகைய இணைய தாக்குதல் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளது.