“பாலியல் குற்றங்களை தடுக்க பெண்களுக்கு தற்காப்பு கலை”:தமிழிசை

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் அமைந்துள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பெண்கள் சிக்கல்களை மட்டுமல்ல பல்வேறு நக்கல்களையும் சந்திப்பதாக கூறினார்.

 

இதனால் தங்களின் பாதுகாப்பிற்காக பெண்கள் யோகாவுடன் சேர்த்து தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டனர்.


Leave a Reply