ஜார்க்கண்டில் இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

 

ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், நான்காவது கட்டமாக 15 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஜமுனாபகுஜர், திரிதி, டம்ரி மற்றும் தொண்டி ஆகிய பகுதிகளில் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு பிற இடங்களில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

 

தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 23-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க உள்ளன. பாஜக தனித்து களம் கண்டுள்ளது.


Leave a Reply