பாலியல் வழக்கு:21 நாட்களில் தீர்ப்பு வழங்கும் திட்டத்தை அமல்படுத்துக!

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் 21 நாட்களில் தீர்ப்பு தந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழிவகுக்கும் ஆந்திர அரசியல் சட்டத்தை நாடு முழுவதும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

டெல்லி பெண்கள் நல ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அவர்களுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று கோரி மலிவால் கடந்த மூன்றாம் தேதி இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் புதிய கோரிக்கையாக ஆந்திர அரசின் திஷா சட்டத்தை நாடு முழுவதும் அமலாக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப்போவதாக சுவாதி மலிவால் கூறியுள்ளார்.

 

12 நாட்களாக உண்ணாமல் இருப்பதால் சுவாதியின் உடல் நலம் மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் அவருக்கு மருத்துவமனையில் அனுமதித்து உடனே சிகிச்சை தரவேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் மருத்துவமனைக்கு வர சுவாதி மறுத்து வருகிறார்.


Leave a Reply