--- --:--:-- --

கமலை நேரில் சந்தித்து விளக்கமளித்த லாரன்ஸ்

8

தர்பார் இசை விழாவில் பேசிய கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசனை சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் விளக்கம் அளித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

 

இதில் பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்நிலையில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து நடிகர் லாரன்ஸ் விளக்கமளித்தார். தனது கருத்து வேண்டும் என்று தவறாக திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் லாரன்ஸ் தெரிவித்தார். இதையடுத்து தனது விளக்கத்தை ஏற்றுக் கொண்ட கமலஹாசன் அன்புடன் வழி அனுப்பி வைத்ததாகவும் லாரன்ஸ் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon