வெங்காய விலை உயர்வை கண்டித்து காங்., கட்சியினர் நூதன போராட்டம்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் வெங்காய விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேரணி நடைபெற்றது.

 

முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தியும் வெங்காய மாலையை அணிந்து கொண்டும் பேரணியாக சென்றனர். முக்கிய வீதிகளில் சென்றவர்கள் தகவல் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


Leave a Reply