பேனர் தடையினால் மீண்டும் புத்துயிர் பெறும் சுவர் ஓவியங்கள்

ஈரோட்டில் பலர் மீண்டும் சுவர் ஓவியங்கள் மூலம் விளம்பரம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிளக்ஸ், பேனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அரசியல் கட்சியினர், திரையுலகினர் பலர் சுவர் ஓவியங்கள் மூலம் விளம்பரம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

பிளக்ஸ், பேனர்கள் வரவால் சுவர் ஓவியம் வரைவதில் ஈடுபட்டிருந்தவர்கள் வேறு தொழிலுக்கு மாறிய நிலையில், தற்போது மீண்டும் இந்த தொழில் புத்துயிர் பெற்றுள்ளது. குறிப்பாக ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் சுவர் ஓவியங்களை அதிகம் காணமுடிகிறது.


Leave a Reply