ஆந்திராவில் பிரீபெய்ட் முறையில் மதுபாட்டில்கள் விற்பனை?

ஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்களை விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் ஆந்திர அரசு வெளியிட்டுள்ளதாக லிக்கர் கார்டு என்ற பெயரில் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

அதில் மது அருந்துவதற்காக லிக்கர் கார்டு என்ற பெயரில் ஏடிஎம் கார்டு போன்று மைக்ரோசிப் பொருத்தப்பட்ட ப்ரீபெய்டு கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார்டை பெறுவதற்கு ஆதார், பான் கார்டுகளை வழங்கி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும், 25 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே இந்த கார்டு வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

 

ஆனால் இதுபற்றி ஆந்திர அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.


Leave a Reply